Thembavani : Classic literature by Rev. Fr. Beschi ( Veeramamunivar): Nagarpadalam (Poem on city of Jerusalem)
முதற் காண்டம் 61 இரண்டாவது நகரப் படலம் வளன் பிறந்த சூதேய நாட்டின் தலைமைப் பதியாகிய எருசலேம் நகரத்தின் சிறப்பைக் கூறும் பகுதி. எருசலேம் பெருமை -விளம், -மா, தேமா, - விளம், -மா, தேமா 1 மெய்வ்வழி மறைநூ னீங்கி வியனுல கினிதென் றின்னா வவ்வழி வுற்ற தென்ன வதிந்தெமை யளித்துக் காக்கச் செவ்வழி யுளத்த தூயோன் றெரிந்தமா நகரி தென்றா லிவ்வழி பின்ன ருண்டோ வெருசலே நகரை வாழ்த்த. மெய் வழி மறை நூல் நீங்கி, வியன் உலகு இனிது என்று, இன்ன...