Posts

Showing posts from January, 2016

Blessed Mother Teresa: Spirit of compassion

Image
Mother Teresa works and deeds were the reflection of divine compassion. The meaning of compassion is  a   feeling   of   deep   sympathy   and   sorrow   for   another  who   is   stricken   by   misfortune,   accompanied   by   a  strong   desire   to   alleviate   the   suffering ( http://dictionary.reference.com/browse/compassion). Compassion can originate from human spirit and it may be augmented by the divine grace. Majority of the people in the world who help the poor or perform charitable works may operate from this status of compassion with or without acknowledging the divine assistance. But very few people carry out the charitable deeds with divine compassion.  Blessed Mother Teresa is one of them, who served people with divine compassion, conviction, and commitment.  In all the status of charitable deeds, the source of charity begins from God and it is accomplished by human. Spirit of God who is the Spirit of compassion enable and move human hearts and guide them in

Thembavani: Rev. Fr. Beschi: King David Ancestor of Joseph

வளன் சனித்த படலம்   தாவீது மன்னன்சிறப்பு 167 அன்ன மா திரு நகர் அகத்து , உடற்கு உயிர் என்ன , மா தாவிதன் இனிதில் வீற்றிருந்து , ஒன்னலார் வெரு உற , உவந்து பாவலர் சொன்ன பா நிகரும் மேல் துளங்கினான் அரோ . 1 168 அருளொடு வீங்கிய அகத்தினான் ; துளி மருளொடு வீங்கிய மழைக் கையான் ; மலர்ச் சுருளொடு வீங்கிய தொடையல் மார்பினான் ; பொருளொடு வீங்கிய பொறைப் புயத்தினான் .   தாவீது மன்னன் மரபில் காப்பியத் தலைவனாகிய வளன் எனப்படும்   சூசை பிறந்த செய்தியைக் கூறும் பகுதி . அத்தகைய பெருமை வாய்ந்த எருசலேம் திரு நகரத்தில் , உடலுக்கு உயிர் போல , பெருமை வாய்ந்த தாவிதன் இன்பமாக அரசு வீற்றிருந்து , பகைவர் அச்சங்கொள்ள , பாவலர் புகழ்ந்து சொன்ன பாடலின் நிகருக்கும் மேலாக விளங்கினான் .      ' அரோ ' அசைநிலை . முன் பாடலில் , '' உடல் உருவே இடை உயிர் நேர் .. அரசு ,&

Rev. Fr. Beschi's Thembavani: Description of St. Joseph's birth place

Image
வளன் சனித்த படலம்   தாவீது மன்னன்சிறப்பு 167 அன்ன மா திரு நகர் அகத்து, உடற்கு உயிர் என்ன, மா தாவிதன் இனிதில் வீற்றிருந்து, ஒன்னலார் வெரு உற, உவந்து பாவலர் சொன்ன பா நிகரும் மேல் துளங்கினான் அரோ. 1 168 அருளொடு வீங்கிய அகத்தினான்; துளி மருளொடு வீங்கிய மழைக் கையான்; மலர்ச் சுருளொடு வீங்கிய தொடையல் மார்பினான்; பொருளொடு வீங்கிய பொறைப் புயத்தினான்.  தாவீது மன்னன் மரபில் காப்பியத் தலைவனாகிய வளன் எனப்படும்  சூசை பிறந்த செய்தியைக் கூறும் பகுதி. அத்தகைய பெருமை வாய்ந்த எருசலேம் திரு நகரத்தில், உடலுக்கு உயிர் போல, பெருமை வாய்ந்த தாவிதன் இன்பமாக அரசு வீற்றிருந்து, பகைவர் அச்சங்கொள்ள, பாவலர் புகழ்ந்து சொன்ன பாடலின் நிகருக்கும் மேலாக விளங்கினான்.      'அரோ' அசைநிலை. முன் பாடலில், ''உடல் உருவே இடை உயிர் நேர் .. அரசு,'' என்றது காண்க. (2 : 70). அவன் உயிர்களிடத்துக் கருணையால் நிறைந்த நெஞ்சம் படைத்தவன்; துளிகளின் மிகுதியால் நிறைந்த மழைபோல் கொடுக்கும் கையை உடையவன்; மலர்ச் சுருள்களால் நிரம்பக் கட்டிய மாலை அணிந்த மார்பு கொண்டவன்; பொன் அணிகலன்களால் நிற

Mother Teresa: Model of Service upon divine love

Image
Mother was an extraordinary humanitarian, who showed us how to love the suffering human through the love of God. She was gentle in spirit, courageous at heart, determinant in faith, and persistent in deeds of charity. The root cause of her humanitarian works was for and by the love of God. It was her conviction that we serve God by serving suffering human. I see a similarity in Mother's statement about serving the leper for the love of God with St. Francis of Assisi. St. Francis of Assisi embraced a leper to experience the love of God. His deliberate and radical action of embracing the leper with the conviction of the love of God, revealed, Jesus visit to him in the disguise of poor leper. St. Francis lived a life of Gospel through his actions, which were deliberate, courageous, and based on the love of God. Like St. Francis of Assisi, Mother was embracing the poor, suffering people, dying, and orphans with the deliberate conviction of actions based on the love of God. Hum

Thembavani:The Unfading Garland

Image
Thembavani From Wikipedia, the free encyclopedia Thembavani  ( தேம்பாவணி  in  Tamil ) [1] [2]  (The Unfading Garland), one of the  Tamil  classics, a poetical work of Veeramamunivar  ( Constanzo Beschi ), on the life of  St.Joseph , earthly father of Jesus Christ. This Tamil  Divina Commedia is divided into thirty-six cantos, containing 3,615 stanzas. "It is," says Baumgartner, "the noblest epic poem in honor of St. Joseph written in any literature, East or West". It begins with the birth of Joseph (வளன், சூசை)and ends with his "coronation" by the Triune God in heavenly glory. Thembavani has more than 100 references to events and teachings in the Bible. Thoroughly immersed in Tamil literature and culture, Beschi integrates several literary devices successfully employed by classics such as  Kamba Ramayanam (கம்ப இராமாயணம்) and  Silappathikaram  (சிலப்பதிகாரம்). This is particularly evident in his description of landscape, mountain, sea, desert

Rev. Fr. Beschi's Thembavani: A classic Tamil Literature ( Poetry Book on St. Joseph)

Image
முதற் காண்டம் 61 இரண்டாவது நகரப் படலம்      வளன் பிறந்த சூதேய நாட்டின் தலைமைப் பதியாகிய எருசலேம் நகரத்தின் சிறப்பைக் கூறும் பகுதி.                     எருசலேம் பெருமை      -விளம், -மா, தேமா, - விளம், -மா, தேமா                            1 மெய்வ்வழி மறைநூ னீங்கி வியனுல கினிதென் றின்னா வவ்வழி வுற்ற தென்ன வதிந்தெமை யளித்துக் காக்கச் செவ்வழி யுளத்த தூயோன் றெரிந்தமா நகரி தென்றா லிவ்வழி பின்ன ருண்டோ வெருசலே நகரை வாழ்த்த. மெய் வழி மறை நூல் நீங்கி, வியன் உலகு இனிது என்று,                                        இன்னா வவ்வு அழிவு உற்றது என்ன, வதந்து எமை அளித்துக்                                        காக்கச் செவ் வழி உளத்த தூயோன் தெரிந்த மா நகர் இது என்றால் இவ் வழி பின்னர் உண்டோ எருசலேம் நகரை வாழ்த்த?      பரந்த இவ்வுலக வாழ்க்கையே இனிதென்று மதித்து, வேத நூல் நாட்டிய உண்மையான வழியை விட்டு விலகியதனால், பாவமாகிய துன்பத்தினால் கவரப்பட்டு இவ்வுலகம் அழிவுக்கு ஆளாகிய தென்று கண்டு, செம்மையான வழியிலேயே செல்லும் உள்ளத்தைக் கொண்ட தூயவனாகிய ஆண்டவன் தானே இவ்வுலகிற்கு வந்து

Rev. Fr. Beschi's Thembavani: A classic Tamil Literature ( Poetry Book on St. Joseph)

Image
முதலாவது நாட்டுப் படலம்      தேம்பாவணியின் 3615 பாடல்களும் 36 படலங்களாக உட்பிரிவு பெற்றுள்ளன. இவற்றை ஒவ்வொன்றும் பன்னிரு படலங்கள் கொண்ட மூன்று பாகங்களாக முதற்கண் வெளியிட்டோர் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காண்டமென்று எண்ணிக்கைப் பெயரிட்டுள்ளனர். முடி சூட்டுப் படலம், 131-ஆம் பாடலிலும், பாவுரை பதிகத்தும் புறவுரை ஆசிரியத்தும் படலத் தொகையும் பாடல் தொகையும் குறிக்கப்பட்டுள்ளன; காண்டம் பற்றிய விவரமே இல்லை. நூலின் தன்னிறைவு கொண்ட பெரும் பிரிவே காண்டம் எனக் கொள்ளத்தக்கது. அதனோடும் இக்காண்டப்பிரிவு பொருந்தவில்லை. எனவே, தேம்பாவணிக்குக் காண்டப் பிரிவு இல்லையென்று கொள்க.      படலம் என்பது காப்பிய உட்பிரிவாய்த் தன்னிறைவு கொண்டு, அடுத்து வரும் படலத்தோடு கதைத் தொடர்பு கொண்டு நிற்பது.      இப்படலம் வளன் பிறந்த சூதேய நாட்டின் இயற்கை வளத்தை இணைத்துக் கூறும் பகுதி.                         மழை வளம்      - மா, கூவிளம், -விளம், -விளம், -மா                              1 புள்ளு லாம்விசும் பிடைதொறும் பொரும்படை பொருவ வெள்ளு லாமழை வெண்கொடி யுருக்கொடு விளங்கித் தெள்ளு லாந்திரை திளைப்பவுண் டெழுந்துயர